போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் (SPOT FINE E,CHELLAN )திட்டத்தை ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய்ரத்தோர் IPSதுவக்கிவைத்தார்.

 

    

ஆவடி காவல் ஆணையரகம் 01.01.2022 அன்று துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் (spot fine) E- chellan திட்டத்தை (நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை), ஆவடி காவல் ஆணைர் அவர்கள்  துவக்கி வைத்துள்ளார்.

இந்த E-challan கருவிகள் சென்னை மாநகரில் உள்ளவாறு National Informatics Centre (NIC), New Delhi-யால் உருவாக்கப்பட்டு இணைய வழியாக செயல்படக் கூடியது மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன், வாகன பதிவிற்க்கான வாகன் (Vahan) இணையதளத்துடனும், ஓட்டுநர்களின் உண்மை தன்மை உறுதி செய்யப்படும். மேலும் இந்த புதிய உரிமம் மென்பொருள் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மீதும் வழக்குகள் பதியலாம். 

இந்த மென்பொருள் மூலம் வழக்குகள் பதியப்பட்டு அவ்வழக்குகள் அபராதம் செலுத்தபடாமல் நிலுவையில் இருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் Fitness Certificate (FC), உரிமையாளர் பெயர் மாற்றம் (Ownership Transfer), Hypothecation Cancellation ,போன்ற எந்த சேவைகளையும் பெற இயலாது, மேலும் போக்குவரத்து அதிகாரிகள் வழக்குகள் பதியும்போதே விதிமீறலில் ஈடுப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யும் வசதியும் கொண்டது.

பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை பற்று அட்டை/கடன் அட்டை (Debit Card/Credit Card) வழியாகவும், போக்குவரத்து காவல் அதிகாரியிடம் உள்ள இயந்திரத்தின் மூலமாகவும், பாரத ஸ்டேட்வங்கி (SBI-Online) இணையதள வங்கி பரிவர்த்தனை வழியாகவும், பேடிஎம்(Paytem), மற்றும் அஞ்சல் அலுவலகம்(Post Office) வழியாகவும் செலுத்தலாம்.

மேற்படி 100 E-challan கருவிகள், (SBI) மற்றும் 100 நிலையான QR குறியீடு (Paytem)  ஆகியவை திரு.சந்தீப் ராய் ரத்தோர் IPS, ஆவடிமாநகர காவல் ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டது.

‌‌‌முதன்மை ஆசிரியர்மரு.கண்ணன், சென்னை.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.