கோவை மாவட்டம்தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து 13 சவரன் நகை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்SP.பாராட்டு

 

கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 01.02.2023 அன்று நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது பழனியத்தாள்(75), சிவபாக்கியம்(65) மற்றும் துளசியம்மாள்(75) ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்றுள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கியின் மனைவி கெளதமி (36)என்பவர் இக் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 


மேலும் விசாரணையில் மேற்படி பெண் இதுபோன்ற பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் கௌதமியை கைது செய்து அவரிடமிருந்து திருடிய 13 சவரன் நகையை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPS அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் தயங்காமல் அழைத்திடுங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

நிருபர்.P.நடராஜ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.