சென்னை, ஆவடி மாநகர திருமுல்லைவாயில் பகுதியில் ஒரே வீட்டை பலருக்கு விற்பனை செய்த வில்லங்க வெங்கடேசன் கோமதி தம்பதியர் அதிரடி கைது.

 



சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் த/பெ ஐயப்பன் என்பவர் கடந்த 15.05.2022 அன்று  ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவில்  எண் 6  - ல் உள்ள  சாய் இல்லம் வீட்டை புகார்தாரர் 

வினோத்  சொந்தமாக  வாங்க வேண்டி எதிரி வெங்கடேசன் என்பவரிடம் 32 லட்சம் பணத்தை முன்பணமாக கொடுத்ததாகவும் எதிரி பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை கிரையம் செய்து கொடுக்காமலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி  நம்பிக்கை மோசடி செய்துவிட்டு வேறொரு நபருக்கு வீட்டை கிரயம் செய்து கொடுத்து விட்டதாகவும் தான் பணத்தை  கேட்டபோது மிரட்டுவதாகவும்  தக்க நடவடிக்கை எடுத்து  பணத்தை      மீட்டுத்தருமாறு  புகார் அளித்தார். 




புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆணையர் உடன் உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட திருமுல்லைவாயில் T 10   காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு ஆணையிட்டார்

மேற்படி  புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர்,  வெங்கடேசன் கோமதி  தம்பதியரிடம்  விசாரணைகளை மேற்க்கொண்டார். மேற்க்கண்ட விசாரணைகளில் பல திடடுக்கிடும்   தகவல்கள் தெரியவந்தது. 

மேற்படி  தம்பதியர்  இது போன்று பல நபர்களுக்கு  தனது வீட்டை விற்பதாக கூறி ஏமாற்றி வந்தது  தெரியவந்தது.  மேலும்   வீட்டை விற்பதாக  வினோத் திடம்  ரூ 32 லட்சம் பெற்றுக்கொண்டு   ஹரீஸ் என்பவருக்கு  வீட்டை  ரூ 1.60கோடிக்கு பத்திரப்பதிவு செய்து  கொடுத்ததும், வங்கியில் ரூ 2.50 கோடிக்கு  கடன் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது கண்டு காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர்.

மேலும்  மேற்படி குற்றவாளி  வெங்கடேசன்  கடந்த ள2019 - ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த  வேங்கடசிவநாதகுமார் என்பவரிடம் பணம் பறிப்பதற்க்காக  ராஜேஷ் என்ற தொழில் அதிபரை கடத்தி தனது சொத்துக்களை மிரட்டி எழுதிவாங்கிகொண்டதாக தொடரப்பட்ட கடத்தல்  வழக்கில்  போலீசார் நடத்திய  சமரச பேச்சுவார்த்தை யை  ராஜேஷ் என்பவர் மூலம் ரகசிய வீடியோ எடுத்து   போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பழிசுமத்தி திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன்,உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்பட 6 காவல் துறையினரை  சிக்கவைத்தது மட்டுமல்லாது காவல் துறை, CBCID , நீதி மன்றம் போன்ற  விசாரணைகளிலும் உட்படுத்தப்பட்டுள்ளது மேற்படி விசாரணைகளில் கிடைத்த முக்கியமான  செய்தியாகும். மேலும்  ராஜேஷ் என்பவன்  தொழில் அதிபரே இல்லை என்றும்  இதில் வெங்கடேசன் மற்றும் ராஜேஷ் இருவரும் சேர்ந்து போலீசாரை ஏமாற்ற திட்டம் தீட்டியதும்  புலன் விசாரணையில் தெரியவந்தது கண்டு   அதிர்ச்சியடைந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேற்படி  வீடு விற்பனை ஏமாற்று வழக்கை விசாரித்த  திருமுல்லைவாயில் காவல் நிலைய  ஆய்வாளர் குற்றப்பிரிவு திரு. கிருஷ்ணகுமார் அவர்கள்  குற்றவாளி வெங்கடேசன் கோமதி தம்பதியரை சாதுரியமாக விசாரணைகள் மேற்கொண்டு  எந்தவித சிபாரிசுகளையும் ஏற்காமல் துணிவுடன் செயல்பட்டு  406,420,506 i IPC ஆகிய குற்ற வழக்குகள் பதிவு செய்து மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளை  சிறையில் அடைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேற்படி வீடு விற்பனை ஏமாற்று வழக்கை சாதுர்யமாக விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளிகள் வெங்கடேசன் கோமதி தம்பதியரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த திருமுல்லைவாயில் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.கிருஷ்ணகுமார்  அவர்கள் மேல்அதிகாரிகளிடம்பாராட்டினைபெற்றுள்ளார் என்பதுகுறிப்பிடதக்கது.


முதன்மை ஆசிரியர் மரு.கண்ணன் சென்னை.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.