காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற மூன்று பேர் கைது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்த மூன்று பேரை செங்கம் வனத்துறையினர் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கம் மற்றும் அதனை சுற்றி 40க்கும் மேற்பட்ட தரை காடுகள் உள்ளது இதில் மான், காட்டு பன்றி, காட்டெருமை, ஓநாய், முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கு சிலர் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருகின்றனர். 

கட்டமடுவு ஊராட்சி குட்டை பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக செங்கம் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குட்டை பகுதியை சேர்ந்த கரிகாலன், ஐய்யப்பன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கொள்ளத்தூர் பகுதியை சேர்ந்த பாபு என்கிற ஏழுமலை ஆகிய மூன்றுபேரை கைது செய்த செங்கம் வனத்துறையினர் மூவரிடம் இருந்த ஐந்து கிலோ காட்டு பன்றி இறைச்சி மற்றும் வேட்டையாட பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் வேட்டையாடபட்டு வருவதை தடுக்க வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குள் வேட்டையாடபடுவதை தடுக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிருபர்.முகமதுயூனுஸ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.