Posts

Showing posts from November, 2022

கரூர் மாவட்ட காவல்துறைதோட்டத்து வீட்டில் 151 கிலோ குட்கா பறிமுதல் அண்ணன் தம்பி கைது.

Image
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் போலீசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரெண்டு பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் சாக்குப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கடம்பர் கோவில் பகுதியே சேர்ந்த ஆசத் ,அவரது தம்பி சாதிக், ஆகியோர் என்பதும் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்தத் தோட்ட த்துவீட்டை போலீசார் சோதனையிட்டு அங்கு சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 151 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை  பறிமுதல் செய்தனர்.மேலும் ஆசத் சாதிக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். நிருபர்.ஜெயபிரகாஷ்.

அகில இந்திய அளவில் நடைபெற்ற ARM WRESTLING போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலருக்கு SP. பாராட்டு.

Image
திருநெல்வேலி‌ 30.11.22 அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான  நடைபெற்ற ARM WRESTLING போட்டி மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் கடந்த 14.11.2022-ம் தேதி  தேதி முதல் 20.11.2022 - ம் தேதி வரை நடைபெற்றது.    இப்போட்டியில் இந்தியாவில் உள்ள 37 மாநிலங்களில் உள்ள காவல் துறையை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி‌ மாவட்டம், ஏர்வாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் செல்வி.நிஷா, அவர்கள், 55 கிலோ பெண்கள்,  ARM WRESTLING- பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலர் செல்வி.நிஷா, அவர்கள்,  திருநெல்வேலி‌ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS, அவர்களை, நேரில் சந்தித்து பதக்கம் மற்றும் நற்சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்கள் கூறியதோடு தொடர்ந்து வெற்றிகள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

Image
 கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி.சோலார் வேலி இய‌க்கிய‌வ‌ருக்கு  25,000 ரூபாய் அபராதமும் 10 நாட்கள் வன விலங்குகள் உயிரிழக்காம‌ல் சோலார் வேலி இயக்க விழிப்புணர்வு ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கிய‌து கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பிரான் குளம் பகுதியில் விவசாய தோட்டத்தில் அமைத்த சோலார் மின் வேலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2வயதுடைய சாம்பார் வகை மான் சிக்கி உயிரிழந்தது, இதனையடுத்து தனியார் தோட்டத்தில்  சோலார் மின் வேலி இயக்கும் மேற்பார்வையாளர் க‌ருப்புதுரை என்ப‌வ‌ர் மீது வன உயிரின சட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் வனசரகர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,  இந்த நிலையில் கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் க‌ருப்புதுரைக்கு ஜாமீன் வழங்க கோரி தனியார் தோட்ட உரிமையாளர்கள் மனு தாக்கல் செய்தனர், இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதியரசர்

செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலரை பாராட்டிய DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS

Image
  24.11. 2022 அன்று, சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய பெண் காவலர் சுசீலா அரசு பேருந்து 48- B இல் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் பயணம் செய்த ஒருவரிடம் இருந்து கைபேசியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற திரு.வி.க நகரை சேர்ந்த ஜாபர் ஷெரீப் (36) என்ற பிரபல வழிப்பறி திருடனை மடக்கிப் பிடித்து  திருடப்பட்ட கைபேசியை மீட்டு அவனை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மூன்று மாத கர்ப்பிணியான பெண் காவலரின் இந்த செயல் பொதுமக்கள் இடையே மிகுந்த பாராட்டை பெற்றது.    (28.11.2022), பெண் காவலர் சுசீலாவை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/DGP.Dr.C. சைலேந்திரபாபு, IPS, அவர்கள் DGP அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். தலைமைநிருபர்G.D.கமல்.

சொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்றமகன்.

Image
  இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன்   கொடைக்கானலில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை மதுபோதையில்  அடித்து கொன்ற மகனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்                    கொலையாளிமகன்                              தந்தை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியில் வசிப்பவர் நடராஜ்(50) இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்,மேலும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்,இவரது மகனான தினேஷ்(28) திருமணம் முடிந்த  நிலையில் தாய்,தந்தையுடன் வசித்து வருகிறார் இவர் தினந்தோறும் குடித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் மேலும் இவரது தந்தையை அவ்வப்போது  மது போதையில் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி வழக்கம் போல் தினேஷ் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அவரது தந்தையான நடராஜிடம் மகன் தினேஷ் தங்களுக்கு தர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்,வாக்குவாதம் முற்றிய நிலையில்  ஆபாச வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தலையில் அடித்துள்ளார்,இதில் மயங்கி விழுந்த நடர

பெண்கள் முதியோர்கள் நலன் மற்றும் பாதுகாப்பி ற்க்காகபுதிய தொடர்பு எண்கள்அறிவித்த SP.சக்திகணேசன் IPS.

Image
. கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் அறிவித்த பெண்களின் நலன் காக்க Ladies first 82200 06082, முதியோர்களின் நலன் காக்க Hello senior 82200 09557 என்ற புதிய காவல் உதவி எண்கள் மூலம் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கடலூர் கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த குணசுந்தரி 37 என்பவர் தனது கொழுந்தனார் கார்த்திக் என்பவர் குடித்துவிட்டு வந்து தினமும் அசிங்கமாக பேசி பிரச்சனை செய்வதாக Ladies First காவல் உதவி எண்ணை தொடர்புகொண்டு அளித்த புகாரின்பேரில் முத்துநகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. வடிவேல் அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து எதிர் மனுதாரரை கடுமையாக எச்சரித்து இனி எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பிரச்சனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.  சிதம்பரம் புதுபூலாம்மேடு பகுதியை சேர்ந்த வடிவழகி 38 என்பவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த எதிர் மனுதாரர் கிருஷ்ணகுமார் என்பவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து பிரச்சனை செய்வதாக L

கோவை மாவட்டம்ஆன்லைனில் பணத்தை இழந்த முதியவருக்கு, துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்துறையினர்.

Image
  கோவை மாவட்டம் துடியலூர் இடிகரை பகுதியில் குமரவேல் (55) என்ற முதியவர் வசித்து வருகிறார். அவரது கைபேசிக்கு எண்ணிற்கு கடந்த 20.10.2022-ஆம் தேதி தங்களுடைய YONO Account block செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிப்பதற்கு தங்களுடைய வங்கி சம்பந்தமான விபரங்களை அனுப்புமாறும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை  உண்மை என்று நம்பிய அவர் தன்னுடைய வங்கி விபரங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளார். அனுப்பிய சிறிது நேரத்திலேயே தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.2,02,715/-  பணத்தை எடுத்துள்ளனர். இது சம்மந்தமாக முதியவர்   உடனடியாக ஆன்லைன் பண மோசடி புகார் எண் 1930,தொடர்பு கொண்டு தன்னுடைய பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளார்.  இப்புகாரின் அடிப்படையில் பணத்தை இழந்த முதியவருக்கு விரைந்து மீட்டுக் கொடுக்கும் பொருட்டு,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன், IPS அவர்கள் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலைய *ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலான சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு  ரூ.1,81,000/- பணத்தை மீட்டு  29.10.2022-ஆம் தேதி அவருடைய வங்கிக் கணக்கிற்கு திரும்ப

தஞ்சாவூர்மாவட்டத்தில் அரசுபள்ளிமாணவரகளிடம் மரம்வளர்க் கும் ஆர்வத்தை ஏற்படுத்திவரும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் IAS.

Image
தஞ்சாவூர்: பேராவூரணி அருகே அரசுப் பள்ளி ஒன்றில், மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்IAS பாராட்டு தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுக்களை வழங்கினார். பின்னர், மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பு அவசியம் குறித்து விளக்கம் அளித்தார்.அப்போது, பள்ளி தலைமையாசிரியை மகேஸ்வரி, வழங்கப்பட்டுள்ள மரக்கன்றுக்களை முறையாக வளர்த்து ஒராண்டு முடிவில், மரத்தை நன்றாக வளர்த்துள்ள மாணவர்களில் ஒருவருக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா இரண்டு பேருக்கு 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா மூன்று மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அவரின் அறிவிப்பை கேட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்ட

இந்தியபேனா நண்பர்பேரவை சார்பாக திருச்சியில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா

Image
இந்தியபேனா நணாபர்பேரவை சார்பாக சர்வதேச அளவிலான சுதந்திரதினவிழா ஓவியபோட்டி,பேச்சுபோட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் திருச்சி மண்டலத்திற்க்குட்பட்ட திருச்சி,தஞ்சை,புதுகோட்டை,மயிலாடுதுறை,திண்டுக்கல்,ஆகியமாவட்டங்களிலிருந்து கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 6-11-22.ஞாயிறு அன்று திருச்சியில் கீழபுலிவார் ரோடு ஹரிசர்வோதமஹா ஹாலில் பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.  விழாவில் போலீஸ்பார்வை இதழ்ஆசிரியர் Dr.N.பாலகிருஷ்ணன்,பேரவையின் பக்ரின் களைஉறுப்பினர்S.அன்பரசு ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றி பரிசுகளைவழங்கினார்கள்.  பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் நோக்கவுரையாற்றி பேரவையின் வளர்ச்சி செயல்பாடுபற்றி விரிவாக எடுத்தரைத்து மாணவர்களைவாழ்த்தி பரிசளித்தார்.   விழாவில் பேரவையின் மண்டலபொறுப்பாளர்கள் திரு. கந்தன் உட்பட மண்டல பொறுப்பாளர்கள் பலர்கலந்துகொண்டனர் பேரவையின் திருச்சிமாவட்ட அமைப்பாளர் திரு.பா.மனோகரன் வரவேற்ப்புரையாற்றி விழாஏற்பாடுகளை செய்திருந்தார் பேரவையின்  தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.பா.கந்தவேல் நன்றியுரையாற்றி விழாவி

தூத்துக்குடி கோவில்பட்டி மேற்கு, எட்டையாபுரம், எப்போதும்வென்றான் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் ஆய்வு.

Image
மேற்படி காவல் நிலையங்களில்  முக்கிய வழக்கு கோப்புகளையும், நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.. L. பாலாஜி சரவணன் அவர்கள்   ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா IPS கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ்,  கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர். நிருபர்.V.முருகேசன்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Image
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வருகின்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாபாதுகாப்பு-2022 குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ்,IASஅவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,IAS, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டிபன்,அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர்திரு.அசோக்குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)திரு.வீ.வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.            சிறப்புநிருபர்.இரா.சக்திவேல்.

காணாமல் போன 6 மாத குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த தமிழ்நாடுஓசூர் காவல்துறை SP. DGPபாராட்டு

Image
 உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி 30.10.2022 -ம் தேதி காலை 04.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர், IPS அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை  காவல்துறையினர் கைது செய்து வழக்குபதிவுசெய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறையினரை SP.சரோஜ்குமார் தாகூர், IPS,  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்    DGP.Dr.C.சைலேந்திர பாபு, IPS அவர்கள் மனதார பாராட்டினார்கள். நிருபர்.முகமதுயூனுஸ்.

காஞ்சிபுரம் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 22 வருட சிறை தண்டணை

Image
 . காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முஜீபூர் ரகுமான் (24) த/பெ முஸ்தபா என்பவர் கடந்த 14.10.2014 அன்று 09 வயது சிறுமியை பாலியல் வனபுணர்ச்சி செய்தது சம்பந்தமாக அப்போதைய சிவகாஞ்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.S.பிரபாகர் அவர்கள் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்யப்பட்டு, வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அஞ்சாலட்சுமி நீதமன்ற காவலர் திருமதி.லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி.N.புவனேஷ்வரி, M.L., ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள். இந்நிலையில் (28.10.2022) மேற்படி வழக்கின் குற்றவாளி முஜீபூர் ரகுமானுக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீத

சென்னை சட்டவிரோதமாக ஹூக்காபார் நடத்தியவர்மீது வழக்கு வேப்பேரி ACP.G.ஹரிக்குமார் அதிரடி நடவடிக்கை

Image
.  போதைபொருள் இல்லா தமிழகம் என்ற முதல்வர்.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைபடி  சென்னைபெருநகரகாவல்ஆணையர்திரு.சங்கர்ஜிவால் IPS.அவர்கள் உத்தரவின் பேரில்  வேப்பேரிகாவல் சரகத்திற்க்குட்ப்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஹூக்கா பார்நடத்திவந்த மேனேஜரை  காவல்நிலையம் அழைத்து வந்து விசாரனை செய்து வழக்குப்பதிந்து . மேற்படி சம்பவ இடத்தில் சட்டவிரோதமாக ஹூக்கா (Hookha) பாரினை நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வேப்பேரி ACP.G.ஹரிக்குமார்  அவர்களின் தனிபடை போலிசார் மேற்படி ஹூக்கா பாரினை  30.10.2022-ம் தேதி இரவு 20.00 மணிக்கு சோதனை செய்து மனிஷ் ஜோஷி (24),த/பெ. மனோஷ், ஜோஷி,எண். 45/20 மூக்காத்தாள் தெரு, புரசைவாக்கம், சென்னை-07.பார்மேனேஜர் - கைதுசெய்து P/R - 05 ஜாடி, 10 பைப் மற்றும் சுமார் 2 கிலோ ஹூக்கா பிளேவர்ஆகியவற்றைகைப்பற்றி பாரின் மேனேஜர்   மனிஷ் ஜோஷி என்பவரை மட்டும் பொருட்களுடன் G.1 வேப்பேரி காவல் நிலையத்திற்கு 20.30 மணிக்கு அழைத்து வந்து விசாரணை செய்து மேற்படி வழக்குபதியப்பட்டது. நிருபர்.ச்சந்தன்

ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 21 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

Image
                                                                       SP.V.பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015- ம் ஆண்டு இடையகோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (45) என்பவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முருகேசன் என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.                                                                                                                                குற்றவாளி இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.திலகா அவர்கள் நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.கார்த்திகை வேணி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால்  28.10.2022-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அ