அகில இந்திய அளவில் நடைபெற்ற ARM WRESTLING போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலருக்கு SP. பாராட்டு.


திருநெல்வேலி‌ 30.11.22 அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான  நடைபெற்ற ARM WRESTLING போட்டி மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் கடந்த 14.11.2022-ம் தேதி  தேதி முதல் 20.11.2022 - ம் தேதி வரை நடைபெற்றது.  

 இப்போட்டியில் இந்தியாவில் உள்ள 37 மாநிலங்களில் உள்ள காவல் துறையை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி‌ மாவட்டம், ஏர்வாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் செல்வி.நிஷா, அவர்கள், 55 கிலோ பெண்கள், 

ARM WRESTLING- பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலர் செல்வி.நிஷா, அவர்கள்,  திருநெல்வேலி‌ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS, அவர்களை, நேரில் சந்தித்து பதக்கம் மற்றும் நற்சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்கள் கூறியதோடு தொடர்ந்து வெற்றிகள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.