சொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்றமகன்.

 



இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன்
 

கொடைக்கானலில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை மதுபோதையில்  அடித்து கொன்ற மகனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்


                   கொலையாளிமகன்



                             தந்தை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியில் வசிப்பவர் நடராஜ்(50) இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்,மேலும் இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்,இவரது மகனான தினேஷ்(28) திருமணம் முடிந்த  நிலையில் தாய்,தந்தையுடன் வசித்து வருகிறார் இவர் தினந்தோறும் குடித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் மேலும் இவரது தந்தையை அவ்வப்போது  மது போதையில் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி வழக்கம் போல் தினேஷ் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அவரது தந்தையான நடராஜிடம் மகன் தினேஷ் தங்களுக்கு தர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்,வாக்குவாதம் முற்றிய நிலையில்  ஆபாச வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தலையில் அடித்துள்ளார்,இதில் மயங்கி விழுந்த நடராஜை அக்கபக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,அங்கும்  சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில்  அவர்  உயிரிழந்துள்ளார்,இதனையடுத்து கொலை முயற்ச்சி என தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த கொடைக்கானல் காவல் துறையினர் தற்போது கொலை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

மகன் சொத்து பிரச்சனை காரணமாக பெற்ற தந்தையை அடித்து கொன்றாரா அல்லது வாரிசு வேலைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிருபர்.R.குப்புசாமி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.