கரூர் மாவட்ட காவல்துறைதோட்டத்து வீட்டில் 151 கிலோ குட்கா பறிமுதல் அண்ணன் தம்பி கைது.


கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் போலீசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரெண்டு பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் சாக்குப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கடம்பர் கோவில் பகுதியே சேர்ந்த ஆசத் ,அவரது தம்பி சாதிக், ஆகியோர் என்பதும் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்தத் தோட்ட த்துவீட்டை போலீசார் சோதனையிட்டு அங்கு சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 151 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை  பறிமுதல் செய்தனர்.மேலும் ஆசத் சாதிக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

நிருபர்.ஜெயபிரகாஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.