கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி


 கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி.சோலார் வேலி இய‌க்கிய‌வ‌ருக்கு  25,000 ரூபாய் அபராதமும் 10 நாட்கள் வன விலங்குகள் உயிரிழக்காம‌ல் சோலார் வேலி இயக்க விழிப்புணர்வு ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கிய‌து கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பிரான் குளம் பகுதியில் விவசாய தோட்டத்தில் அமைத்த சோலார் மின் வேலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2வயதுடைய சாம்பார் வகை மான் சிக்கி உயிரிழந்தது, இதனையடுத்து தனியார் தோட்டத்தில்  சோலார் மின் வேலி இயக்கும் மேற்பார்வையாளர் க‌ருப்புதுரை என்ப‌வ‌ர் மீது வன உயிரின சட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் வனசரகர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர், 

இந்த நிலையில் கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் க‌ருப்புதுரைக்கு ஜாமீன் வழங்க கோரி தனியார் தோட்ட உரிமையாளர்கள் மனு தாக்கல் செய்தனர், இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதியரசர் கார்த்திக் தனியார் தோட்டத்தின் சோலார் மின்வேலியை இயக்கிய‌ க‌ருப்புதுரைக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்,  

மேலும் இந்த அபராத தொகையினை கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும்,சோலார் மின் வேலியில் அதிக மின்சாரம் பாய்ந்ததால் மான் உயிரிழந்தது என விசாரணையில் தெரியவந்ததையடுத்து வரும் கால‌ங்க‌ளில் சோலார் மின் வேலியில் சிக்கி எந்த‌ ஒரு வன விலங்குகளும் உயிரிழக்காத சூழ‌ல் உருவாக‌ வேண்டும் என்பதற்குகாக அடுத்த 10 நாட்கள் கொடைக்கானல் மலைக்கிராம ப‌குதிக‌ளுக்கு சென்று அங்குள்ள‌ விவசாயிகளுக்கு வ‌ன‌த்துறையின‌ருட‌ன் இணைந்து  மான் உயிரிழப்புக்கு காரணமான சோலார் மின் வேலி இயக்கியவர் வன விலங்குகள் உயிரிழக்காத வண்ணமாக விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும், 

விழிப்புண‌ர்வு எவ்வாறு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து என்ற‌ விப‌ர‌த்தினை மாவ‌ட்ட‌ வ‌ன‌ அலுவ‌ல‌ர் அறிக்கையாக‌ நீதிம‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்ய‌வேண்டும் என்ற‌ வித்தியாச‌மான‌ நிபந்தனையுட‌ன்  குற்றவியல் நீதி மன்றம நீதிப‌தி கார்த்திக் ஜாமின் வ‌ழ‌ங்கினார்.மேலும் வன விலங்குகள் உயிரிழக்காத வண்ணமாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது வன விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

நிருபர்.R.குப்புசாமி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.