பெண்கள் முதியோர்கள் நலன் மற்றும் பாதுகாப்பி ற்க்காகபுதிய தொடர்பு எண்கள்அறிவித்த SP.சக்திகணேசன் IPS.


. கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் அறிவித்த பெண்களின் நலன் காக்க Ladies first 82200 06082, முதியோர்களின் நலன் காக்க Hello senior 82200 09557 என்ற புதிய காவல் உதவி எண்கள் மூலம் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடலூர் கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த குணசுந்தரி 37 என்பவர் தனது கொழுந்தனார் கார்த்திக் என்பவர் குடித்துவிட்டு வந்து தினமும் அசிங்கமாக பேசி பிரச்சனை செய்வதாக Ladies First காவல் உதவி எண்ணை தொடர்புகொண்டு அளித்த புகாரின்பேரில் முத்துநகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. வடிவேல் அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை செய்து எதிர் மனுதாரரை கடுமையாக எச்சரித்து இனி எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பிரச்சனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. 

சிதம்பரம் புதுபூலாம்மேடு பகுதியை சேர்ந்த வடிவழகி 38 என்பவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த எதிர் மனுதாரர் கிருஷ்ணகுமார் என்பவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து பிரச்சனை செய்வதாக Ladies First காவல் உதவி எண்ணை தொடர்புகொண்டு அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் விசாரணை செய்து எதிர் மனுதாரரை கடுமையாக எச்சரித்து இனி எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பிரச்சினை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

சிதம்பரம் கொத்தங்குடி பகுதியைச் சேர்ந்த 56, வயதான முதியவர் கலாவதி என்பவர் Hello Senior காவல் உதவி எண்ணில் தொடர்புகொண்டு தனது மகன் ராஜ்குமார் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் பேசி அடிப்பதாக புகார் தெரிவித்ததன்பேரில் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. காளிமுத்து அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரித்து புகார்தாரின் மகன் ராஜ்குமாரை கடுமையாக எச்சரித்து அம்மாவிடம் இனிமேல் எந்தவொரு பிரச்சனையும் செய்யக்கூடாது என தக்க அறிவுரைகள் வழங்கினார், ராஜ்குமாரும் அதனை ஏற்றுக்கொண்டு அம்மாவிடம் இனிமேல் எவ்வித பிரச்சனையும் செய்யமாட்டேன் என உறுதியளித்ததன் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

இதுபோன்று அலைபேசி மூலம்புகார் பெற்று உடனடி தீர்காணகூடிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் SP.சக்திகணேசன் IPS அவர்களுக்கு பொமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்னர் என்பது குறிப்பிடதக்கது.

சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.