ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 21 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.


                                                                       SP.V.பாஸ்கரன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015- ம் ஆண்டு இடையகோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (45) என்பவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முருகேசன் என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

                                                     

                                                                         குற்றவாளி

இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.திலகா அவர்கள் நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.கார்த்திகை வேணி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால்  28.10.2022-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முருகேசன் என்பவருக்கு 21, வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

நிருபர்.R.குப்புசாமி

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.