இந்தியபேனா நண்பர்பேரவை சார்பாக திருச்சியில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா


இந்தியபேனா நணாபர்பேரவை சார்பாக சர்வதேச அளவிலான சுதந்திரதினவிழா ஓவியபோட்டி,பேச்சுபோட்டி மும்பையில் நடைபெற்ற விழாவில் திருச்சி மண்டலத்திற்க்குட்பட்ட திருச்சி,தஞ்சை,புதுகோட்டை,மயிலாடுதுறை,திண்டுக்கல்,ஆகியமாவட்டங்களிலிருந்து கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 6-11-22.ஞாயிறு அன்று திருச்சியில் கீழபுலிவார் ரோடு ஹரிசர்வோதமஹா ஹாலில் பாராட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.






 விழாவில் போலீஸ்பார்வை இதழ்ஆசிரியர் Dr.N.பாலகிருஷ்ணன்,பேரவையின் பக்ரின் களைஉறுப்பினர்S.அன்பரசு ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றி பரிசுகளைவழங்கினார்கள்.

 பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் நோக்கவுரையாற்றி பேரவையின் வளர்ச்சி செயல்பாடுபற்றி விரிவாக எடுத்தரைத்து மாணவர்களைவாழ்த்தி பரிசளித்தார்.

 



விழாவில் பேரவையின் மண்டலபொறுப்பாளர்கள் திரு. கந்தன் உட்பட மண்டல பொறுப்பாளர்கள் பலர்கலந்துகொண்டனர் பேரவையின் திருச்சிமாவட்ட அமைப்பாளர் திரு.பா.மனோகரன் வரவேற்ப்புரையாற்றி விழாஏற்பாடுகளை செய்திருந்தார் பேரவையின்  தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.பா.கந்தவேல் நன்றியுரையாற்றி விழாவிற்க்கு வருகைதந்த அனைவருக்கு நன்றிதெரிவித்தார்.

 குறிப்பாக பேரவையின் நிறுவனதலைவர்.திரு.மா.கருண் அவர்கள் அலைபேசி காணொளிவாயிலாகபேசி  மாணவர்களுக்கும் வருகைதந்த அனைவருக்கு நன்றிகலந்த வாழ்த்தினைதெரிவித்தார்  விழாஇனிதே நிறைவுற்றது.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.