தஞ்சாவூர்மாவட்டத்தில் அரசுபள்ளிமாணவரகளிடம் மரம்வளர்க் கும் ஆர்வத்தை ஏற்படுத்திவரும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் IAS.


தஞ்சாவூர்: பேராவூரணி அருகே அரசுப் பள்ளி ஒன்றில், மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்IAS பாராட்டு தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுக்களை வழங்கினார்.

பின்னர், மாணவ, மாணவிகளிடம் மரம் வளர்ப்பு அவசியம் குறித்து விளக்கம் அளித்தார்.அப்போது, பள்ளி தலைமையாசிரியை மகேஸ்வரி, வழங்கப்பட்டுள்ள மரக்கன்றுக்களை முறையாக வளர்த்து ஒராண்டு முடிவில், மரத்தை நன்றாக வளர்த்துள்ள மாணவர்களில் ஒருவருக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா இரண்டு பேருக்கு 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா மூன்று மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அவரின் அறிவிப்பை கேட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்IAS கூறும்போது, 'தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுக்கள் நடவு செய்யும் பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது. அதன்படி தற்போது வரை 93 ஆயிரம் மரக்கன்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுக்கள் வளர்ப்பில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அரசுப் பள்ளி தலைமையாசிரியை மற்றும் பிற ஆசிரியர்களும் சேர்ந்து, அவரது பள்ளி மாணவ, மாணவிகளை மரக்கன்று வளர்ப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது" என்றார்.

நிருபர்.R.சக்திவேல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.