Posts

திருச்சிசமயபுரம் கோவிலில் அக்னி வெயிலில் வாடி வதங்கும் பக்தர்கள்.

Image
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிதி மூலம் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்   காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்களால் 10-05-23 இன்று திறந்து வைத்துள்ள நிலையில், சமயபுரம் கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி கூட இல்லாமல் தவித்த நிலையில், அக்னி வெயிலில் வெந்து வாடும் நிலையில் உள்ளது. சமயபுரம் கோவிலில் பொது தரிசனம் அல்லாது பக்தர்கள் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வதற்கு  நீண்ட வரிசையில் மணிக்கணக்காக வெயிலில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது,  தற்காலிக நிழற்குடையாவது அமைத்திருக்கலாம் என்று பக்தர்கள் மனவருத்தத்துடன் சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்வதற்கு கேள்வி எழுப்பி செல்கின்றனர். சிலர் வெயிலில் வரிசையில் நிற்க முடியாமல் மயங்கி விழும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது, சிலர் தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது, வாடி வதங்கும் பக்தர்கள் மீது கருணை இல்லாமல் நடந்து கொள்கிறதா கோவில் நிர்வாகம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், உடனடியாக கோவில் நிர்வாகம் இதனை சரி செய்து தர நடவடிக்கை எடுக்குமா என பக்தர்கள் பலர

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

Image
  .ஈரோடுமாவட்டம், சென்னம்பட்டியில் இருந்து, வெளிநாடுகள் வரை, விளையாட்டுபோட்டிகளில்  சாதனைகள் புரிந்த, கவுந்தப்பாடி காவல் நிலைய தலைமை காவலர் சரவணகுமாருடன் நேர்காணல். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம்,  சென்னம்பட்டி கிராமத்தில், விவசாய குடும்பத்தைச் சார்ந்த நல்லசாமி காமாட்சி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்த,   திரு. சரவணகுமார் தனது கடின உழைப்பாலும், உடற்பயிற்சியாலும், தமிழக காவல்துறையில் தேர்வாகி, இதுவரை கவுந்தப்பாடி காவல் நிலையத்தில், தலைமை காவலராக திறம்பட பணிபுரிந்து, தற்போது கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும், திரு. சரவணகுமார் அவர்கள், தற்போது தேசிய அளவில், விளையாட்டுபோட்டிகளில் பல சாதனைகள்  புரிந்து, பிறந்த மண்ணிற்கும், காவல்துறைக்கும். நாட்டிற்கும், பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.  தான் கஷ்டப்பட்டு, கடந்த வந்த பாதை பற்றி, பட்டதாரியான திரு. சரவணகுமார் கூறுகையில், நான் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உடற்பயிற்சி, நண்பர்கள் உதவி மூலம், ஊட்டச்சத்து உணவு வகைகள் உட்க்கொண்டு, விளையாட்டு மற்றும் தமிழக காவல்துறையில்,  திறம்பட பணி புரிந்து வருகிறேன்... எ

விழுப்புரம்மாவட்டத்தில் இந்தியன்வங்கியில்ரூ.43 லட்சத்தைஆட்டையபோட்ட கேஷியர் முகேஷ் கைது காவல்துறையினர் அதிரடி SP.ஶ்ரீநாதாIPS.பாராட்டு.

Image
  விழுப்புரம் மா வட்டம் விழுப்புரம் உட்கோட்டம் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காசாளராக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த முகேஷ் (27) த/பெ. கந்தன் என்பவர்  25/042023 ஆம் தேதி வங்கியில் இருந்த பணம் ரூபாய் 43,89,500/- த் தை திருடி சென்று விட்டதாக வங்கி மேலாளர் கொடுத்த புகார் மனுவை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. முரளி திரு. சந்திரசேகர் மற்றும் திரு .பாண்டியன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு திருடு போன 48 மணி நேரத்துக்குள் திருடன்கேஷியர் முகேஷை கைது செய்து திருடு போன பணத்தையும் மீட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டனர் இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர்திரு.ஶ்ரீநாதா IPS வெகுவாக பாராட்டினார். நிருபர்.ராமநாதன்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.

Image
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்படி  (01.05.2023) குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலகனம் கிராம பகுதியில் பொதுமக்களிடம் ‘மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன்  SOS செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மேற்படி காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப

கரூர் மாவட்ட காவல்துறையில் சாலைவிபத்தில்உயிரிழந்தகாவலர்குடும்பத்திற்க்கு உதவிதொகைவழங்கிய காவல்துறையில்காக்கும்உறவுகள் காவலர்கள்.

Image
  கரூர் மாவட்டத்தை சேர்ந்த திரு M. அஜித் என்பவர் பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இயற்கை எய்தினார்.   அவருக்கு 2017 Batch காக்கும் உறவுகள் சார்பாக  36 மாவட்டத்திலிருந்து 5324 காவலர்கள் வழங்கிய தொகை ரூ.16,27,439 அவர்களின் குடும்பத்திற்கு  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம் IPS., அவர்களின் மூலம்  22.04.2023 வழங்கப்பட்டது. மேலும் 2017 batch காவலர்களின் இந்த முயற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். நிருபர்.ஜெயபிரகாஷ்.

கல்விசுற்றுலாவந்தமாணவ மாணவிகளிடம் பொதுஅறிவுகேள்விகள்கேட்டு வழிப்புணர்வு கலந்துரையாடிய மாவட்ட SP.R.ராஜாராம்

Image
 . கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ஷளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலத்திற்கு வந்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. ராஜாராம் அவர்கள் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை  அவரவர்களுக்கிடையே கேட்டு கலந்துரையாடினார். நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறேன்.மாணவர்களாகிய நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்தும், பெற்றோர்களுக்கு உறுதுணையாக உதவி செய்ய வேண்டும் எனவும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் என அறிவுரை  கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும்,  பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சுப்பிரமணியன், ஆசிரியை ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் திருமதி. சுகுணா ,

காஞ்சிபுரம்மாவட்டத்தில் உள்ளகாவல்நிலையவரவேற்பாளர்களுக்கு லேப்டாப்வழங்கிய DIG.பகலவன் IPS

Image
 காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர்DIG. திரு.P.பகலவன், IPS., அவர்கள் தலைமையில் காவல் நிலையங்களில்உள்ள வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினி வழங்கும்நிகழ்ச்சிநடைப்பெற்றது. காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் இரண்டு உட்கோட்டங்களும், 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, எளிதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவும் அவற்றை சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் Petition Enquiry and Tracking System என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இச்செயலியின் மூலம் முதலாவதாக, மனு கொடுப்பவரின் விவரமும் மனுவின் தன்மை பற்றியும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்து அதற்கென தனியாக ஒரு மனு எண் (Complaint ID) ஒதுக்கப்படும். இரண்டாவதாக, அம்மனுவினை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அம்மனுவின் மீது எடுக்கபட்ட நடவடிக்கையின் விவரத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்க