கல்விசுற்றுலாவந்தமாணவ மாணவிகளிடம் பொதுஅறிவுகேள்விகள்கேட்டு வழிப்புணர்வு கலந்துரையாடிய மாவட்ட SP.R.ராஜாராம்

 .

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ஷளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலத்திற்கு வந்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. ராஜாராம் அவர்கள் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை  அவரவர்களுக்கிடையே கேட்டு கலந்துரையாடினார்.


நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறேன்.மாணவர்களாகிய நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுத்தும், பெற்றோர்களுக்கு உறுதுணையாக உதவி செய்ய வேண்டும் எனவும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் என


அறிவுரை  கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும்,  பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சுப்பிரமணியன், ஆசிரியை ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் திருமதி. சுகுணா ,திருமதி சிந்தனை செல்வி, சமையலர் திருமதி. பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து செல்லும்போது அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன், அனைத்து காவல்துறையினருக்கும் கை கொடுத்தும் சல்யூட் அடித்தும் சென்றனர்.

நிருபர்.ஜெயச்சந்திரன்.கடலூர்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.