காஞ்சிபுரம்மாவட்டத்தில் உள்ளகாவல்நிலையவரவேற்பாளர்களுக்கு லேப்டாப்வழங்கிய DIG.பகலவன் IPS

 காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர்DIG. திரு.P.பகலவன், IPS., அவர்கள் தலைமையில் காவல் நிலையங்களில்உள்ள வரவேற்பாளர்களுக்கு மடிக்கணினி வழங்கும்நிகழ்ச்சிநடைப்பெற்றது.

காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் இரண்டு உட்கோட்டங்களும், 12 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, எளிதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவும் அவற்றை சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் Petition Enquiry and Tracking System என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இச்செயலியின் மூலம் முதலாவதாக, மனு கொடுப்பவரின் விவரமும் மனுவின் தன்மை பற்றியும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்து அதற்கென தனியாக ஒரு மனு எண் (Complaint ID) ஒதுக்கப்படும். இரண்டாவதாக, அம்மனுவினை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அம்மனுவின் மீது எடுக்கபட்ட நடவடிக்கையின் விவரத்தை பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்கப்படும். இதற்கென, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தனித்தனியாக மொத்தம் 14 வரவேற்பாளர்கள் (Receptionist) பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் மனுக்களின் விவரத்தினையும் அதற்கான தீர்வினையும் எளிதாகவும் விரைவாகவும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய இயலும். 

மேலும், அவ்வாறு கொடுத்த புகார் மனுக்களின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா எனவும், விசாரணை அதிகாரியின் நடத்தைப் பற்றியும், மனுவில் கொடுக்கப்பட்ட அனைத்து எதிர்மனுதாரர்களையும் முறையாக அழைத்து விசாரணை செய்யப்பட்டதா எனவும், விசாரணை திருப்திகரமாக இருந்ததா எனவும், விசாரணை அதிகாரியால் கையூட்டு பெறப்பட்டதா கேள்விகளை மனுதாரர்களிடமிருந்து கேட்டு அதை பதிவு செய்து மாவட்ட தலைமையகத்தில் நியமிக்கப்படும் அலுவலர்களால் இதே செயலியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நேரடியாக கண்காணிக்கப்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடக்கமாக, காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர்DIG. திரு.P.பகலவன், IPS., அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. M.சுதாகர், அவர்கள்  மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.வினோத் சாந்தாராம் உடன் இருந்தனர்.

சிறப்புநிருபர்.ம.சசி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.