மறைமலை நகர் காட்டான் குளத்தூர் JRK.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவிஆய்வாளர் லோகேஷ்காந்தி சாலைபாதுகாப்புவிழிப்புணர்வுஉரை
.
JRKபள்ளிஆண்டு விழாவில் மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் R. லோகேஷ் காந்தி அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
காவல்உதவிஆய்வாளர் கூறுகையில் மாணவ மாணவிகளே நீங்கள் பள்ளி வளாகத்திலும் வீட்டிலும் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் வழியில்பயணிக்கும்போதும் விழிப்புணர்வோடு தைரியமாக சமயோஜித புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும் நமதுகவனகுறைவினால்விபத்துஏற்படுவதுடன் பல்வேறு இடங்களில் இணையவழி தொடர்பினாலும் பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக் ,போன்ற வலைத்தளங்களினால் அறிமுகம் இல்லாத தொடர்பு ஏற்படுவதாலும் அந்த தொடர்பினால் நமது கல்வியும் வாழ்க்கை முறையும் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன .
அது போன்று தீமையான சம்பவத்தினால் நம் கல்வி பாதிக்கப்பட்டு மாணவ மாணவிகள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படக்கூடாது ஏனென்றால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் நலனுக்காக செயல்படக்கூடியவர்கள் ஆகையால் மாணவ மாணவிகளாகிய நாம் தான் எச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இணைய வலைத்தளங்களை உபயோகிக்கும் போது நமது கல்விக்கும் வாழ்வியலுக்கும் நன்மை தரக்கூடிய விஷயங்களை தான் நாம் இணைய வலைதளங்களில் தேடி தரவிறக்கம் செய்ய வேண்டும் நாம் இணைய வலைத்தளங்களை தவறாக உபயோகப்படுத்தும் போது நமது வாழ்க்கை பாதிக்க கூடிய சூழல் ஏற்படுகிறது அவ்வாறு நிகழ்வுகள் நடக்கும் பொழுது உங்கள் கவனக்குறைவால் பெற்றோர்களும் பாதிப்படைகிறார்கள் ஆகையால் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும் அப்பொழுதுதான் நாம் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெற முடியும் உங்கள் வருங்கால லட்சியம் ஈடேறும் .
ஆகையால் சாலை போக்குவரத்திலும் சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனங்களில் போகும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் சாலை போக்குவரத்து விதிகளை மீறாமல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விழிப்புடன் செயலாற்றுங்கள் என்று கூறினார் அதேபோல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் நடைமுறை செயல்பாடுகளை கவனித்து நமது விருப்பம் வெறுப்பை அவர்களிடம் திணிக்காமல் அவர்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த பெற்றோர்களாகிய நாமும் உறுதுணையாக செயல்பட வேண்டும் அதே சமயத்தில் அவர்கள் செயல்பாடுகளில் பெற்றோர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
விழாவில் NCC, பேன்ட்பிரிவு மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர் விழாவில் JRK.பள்ளி நிர்வாக அறங்காவலர் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தாம்பரம் போக்குவரத்து வார்டன் திரு. கருப்பையா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சிறப்பு நிருபர் N. முரளிதரன் நிருபர்கள் P. மணிமாறன், ஆலன்பே.



Comments
Post a Comment