திருச்சிமாநகர காவல்துறைசார்பாக திருச்சிER.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குழந்தைஉரிமை -போதைபொருள் தடுப்பு பாதுகாப்பு விழிப்புணரவுநிகழ்ச்சி
திருச்சி மாநகர காவல்துறை காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன் IPS அவர்களின் உத்தரவின்படி, காவல்துணை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) அவர்களின் வழிகாட்டுதலின் படி குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி சிந்தாமணி E.R மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் அவர்களின் தலைமையில் 29.06.22 நடைபெற்றது.
பள்ளியின் நிர்வாக தலைவர் ராகவன் அவர்கள் முன்னிலை வகித்தார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் சைபர் செல் காவல் ஆய்வாளர் சிந்துநதி அவர்கள் குழந்தைகள் என்போர் யார், அவர்களின் உரிமைகள், போதைப் பொருளினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் காவல்துறை, அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் திசைமாறி, வழி மாறி செல்லக்கூடிய குழந்தைகளை மீட்பதில் மாணவர்களின் பங்கு, போதைப் பொருளினால் பாதிக்கப்படும் குழந்தைகள் ,சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பது, போதைப் பொருள் விற்பது தொடர்பான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 குறித்து பேசினார்.
சமூக பாதுகாப்புத் துறை குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு இளஞ்சிறார் நீதி சட்டம் மூலம் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதி குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1986, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குடிபோதை மறுவாழ்வு மையங்கள் செயல்பாடுகள் ,போதைப் பொருளினால் அடிமையாகவும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு மறுவாழ்வு அளிப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.
சைல்டு லைன் 1098 பணியாளர் ராபின் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 செயல்பாடுகள் தெருவோர குழந்தைகள்,பிச்சை எடுக்கும் குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் ஆகியோரை மீட்டு ஆலோசனை வழங்கப்பட்டு குழந்தைகள் சமுதாயத்தில் சிறப்பான குழந்தைகளாக உருவாக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கினார். குழந்தைகள் மீதான வன்முறை, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.போதை பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி அனைத்து மாணவர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர். S,மணிகண்டன்
.jpeg)
.jpeg)

.jpeg)


Comments
Post a Comment