திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் போதை பொருள் உபயோகத்தினால் ஏற்படக்கூடிய தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் போதை பொருள் உபயோகத்தினால் ஏற்படக்கூடிய தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் திருப்பூர் மாநகரில் எஸ் சி எம் கார்மென்ட்ஸ் பகுதியில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர காவல் துறை துணை ஆணையர் திரு. அபினவ் IPS மற்றும் காவல் ஆய்வாளர் பிரகாஷ் , அனைத்து மகளிர் காவல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா மற்றும் திருப்பூர் மாநகர காவல் குழுவினர். பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து விரிவான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கியும் நேரடியாக மக்கள் மத்தியில் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் ஆகியவர்கள் திரளாக கலந்து கொண்டு போதை பொருள்களினால் ஏற்படும் தீமை குறித்து தெரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Chief Reporter.A.Mriraja.

.jpeg)

Comments
Post a Comment