தமிழகத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் புகைபிடிப்போர் மீது நடவடிக்கை .எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது
தமிழகத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் புகைபிடிப்போர் மீது நடவடிக்கை .எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. மேலும் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட 20 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்ஆட்சியர்P.N.ஶ்ரீதர் IAS அவர்கள் உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் மார்க்கெட் வீதி பொது இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் அமுதா ,சுப்பிரமணி, சங்கரன் ,சண்முகம், தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பேருந்து நிலையத்தில் புகை புகைப்பிடித்த 20 நபர்களுக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் அபதாரம் விதித்தனர்.
சிறப்புநிருபர்நிருபர்.இரா.சக்திவேல்.

Comments
Post a Comment