கொடைக்கானலில் உண‌வு பாதுகாப்புதுறை சார்பில் வாக்க‌த்தான் விழிப்புண‌ர்வு பேர‌ணி ந‌டைபெற்ற‌து.



திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம்  கொடைக்கானலில் இன்று உணவு பாதுகாப்பு துறை சார்பாக வாக்க‌த்தான் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதனையடுத்து பிரையண்ட் பூங்காவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு பழக்க வழக்கங்கள்,உண‌வு த‌யார் செய்ய‌ப்ப‌டும் போதும், ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உண‌வினை வ‌ழ‌ங்கும் போதும்  சுத்த‌மாக‌வும், சுகாதார‌மாக‌வும் கையாள‌க்கூடிய‌ வ‌ழிமுறைக‌ளும், உட‌லிற்கு தேவையான‌ சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்,உடலை பாதுகாக்க தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் எடுத்துரைக்க‌ப்ப‌ட்ட‌து, 


அதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்க‌த்தான் பேரணி நடைபெற்றது,இந்த பேரணியானது  பிரைய‌ண்ட் பூங்காவில் இருந்து துவங்கி  ஏரிச்சாலை, சாலை வழியாக 7 ரோடு சந்திப்பில் உள்ள தனியார் விடுதியை சென்றடைந்தது, மேலும் இந்த பேரணியில் வலிமையான பாரதம்,கீப் ரைட் இந்தியா,ஆரோக்கியமான உணவு என முழங்கங்கள் இட்டு பள்ளி மாணவ மாணவியர்கள் பேரணியாக சென்றனர்,இந்த பேரணியில் கொடைக்கானலை சுற்றியுள்ள பள்ளியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்,  இறுதியில் காய்கறிகள், பழ  வகைகள் தானிய வகைகளின் பெயர்கள்  அதில் கிடைக்கும் ச‌த்துக்கள் குறித்து விள‌க்க‌த்துட‌ன் கூடிய  பலகைகள் வைக்கப்பட்டு   மாணவ மாணவியர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது, இந்நிகழ்ச்சியில்உணவுபாதுகாப்புதுறை அலுவலர்.திரு.லாரன்ஸ், கொடைக்கானல் கோட்டாட்சியர்.திரு.முருகேசன், நகராட்சி ஆணையாள‌ர்.திரு.நாராயணன், காவல் துறைதுணை கண்காணிப்பாளர்,திரு.சீனிவாசன், நகர்ம‌ன்ற‌ தலைவர்.திரு.செல்லதுரை,நகர் மன்ற துணை தலைவர்திரு.மாயகண்ணன், மகளிர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட‌ அரசு அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

நிருபர்.R.குப்புசாமி.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.