கோவை மாவட்டத்தில் காவல்துறைசார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்.திட்டம்



கோவை மாவட்டத்தில் காவல்துறைசார்பில்  அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமே "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்".திட்டம் இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி (29.06.2022) கோவையில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 94 பள்ளிகளில் பணிபுரியும்  தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.




இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில்  மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர் IPS அவர்கள் தலைமை வகித்தார். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் Dr.M.S. முத்துசாமி IPS அவர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள்,மாவட்ட  கல்வி அலுவலர், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜபாண்டி, இக்கல்லூரியின் நிர்வாக செயலாளர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் இத்திட்டத்தின் நோக்கமே கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான எந்த ஒரு குற்றங்களும் நடவாமல் தடுப்பது மற்றும் அவர்களை அக்குற்றங்களிலிருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க 1098 என்ற எண்ணிலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

நிருபர்கள்.கோவிந்தசாமி,P.நடராஜ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.