04.07.2022 ம் தேதி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,இ.கா.ப., அவர்கள், சேலம் மாநகரத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட புதிய நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்து சேலம் தடய அறிவியல் ஆயுவகத்திற்கு ஒப்படைத்தார்


 04.07.2022 ம் தேதி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,இ.கா.ப., அவர்கள், சேலம் மாநகரத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட புதிய நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்து சேலம் தடய அறிவியல் ஆயுவகத்திற்கு ஒப்படைத்தார். 


இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கிடவும், ஆரம்பகட்ட ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளன. ரத்தக்கறை, வெடிபொருள், போதைப்பொருள், துப்பாக்கிச்சூட்டின் படிமங்கள் ஆகியவைகளை குற்ற நிகழ்விடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாளுவதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடயப்பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்குரிய உட்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.T.சரவணன் அவர்கள், தடய அறிவியல் ஆய்வக அறிவியல் அலுவலர் திரு.P.வடிவேல் அவர்களும் உடனிருந்தார்கள்.

SpecialReporter.S.Asifmohamed.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.