தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் வைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் போக்ஸோ வழக்குகளின் புலன் விசாரணை குறித்த விளக்க உரை வகுப்புSP.Dr.பாலாஜிசரவணன்தலைமை


 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் வைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் போக்ஸோ வழக்குகளின் புலன் விசாரணை குறித்த விளக்க உரை வகுப்பு தூத்துக்குடிமாவட்டத்தில்(07.05.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அகாடமி மற்றும் நீதித்துறை அகாடமியின் கௌரவ விரிவுரையாளர் திரு. சிவக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து காப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், போக்சோ சட்டங்கள் மற்றும் அதன் புலன் விசாரணைகள் குறித்தும் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், அஓனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.