கள்ளகுறிச்சிமாவட்டம் கல்வராயன்மலைவாழ் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு போட்டி தேர்வு இலவச பயிற்சி மையம் நடத்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை SP.செல்வகுமார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 170 மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன, அவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும், அங்கு வசிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் எண்ணினார். அதன்படி மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் அவர்களில் பெரும்பாலானோர் அரசுபணிக்கு வரவேண்டும் அப்போது தான் வாழ்க்கை தரம் உயரும் மலைவாழ் கிராமங்களில் பெரும்பாலான இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக கள்ளக்குறிச்சி நகரத்திலுள்ள பயிற்சி மையத்திற்கு சென்று படிப்பதற்கும் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
எனவே கரியாலூர் காவல்நிலையம் அருகே உள்ள வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் முற்றிலும் இலவசமாக போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதன்படி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி முதல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதுவரை சுமார் 128 மலைவாழ் இளைஞர்கள் மற்றும் பெண்பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தினமும் சுமார் 70க்கு மேற்பட்ட நபர்கள் பயிற்சி மையத்திற்கு வருகை புரிந்து இந்த இலவச வகுப்பில் படித்து பயன்பெற்று வருகின்றனர்.மேலும் பயிற்சி மையத்தில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் குரூப் 4 பாடத்திட்ட குறிப்பேடுகள், புத்தகங்கள், நோட்டுக்கள் மற்றும் பேனாகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன் வகுப்பறைகள் Projector திரை மற்றும் கணினி மூலமாக உயர்தர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதுடன் வாரம் இருமுறை TNPSC மாதிரி தேர்வு நடத்தப்பட்டும் வருகிறது.
தினமும் பயிற்சியின் போது மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் காலை, மாலை இருவேளை தேனீர் வழங்கப்பட்டு வருகிறது, இந்த இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் நன்கு அனுபவமுள்ள போட்டித் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கக்கூடிய திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் வாரம் இருமுறை TNPSC Group 4 மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று 05.05.2022-ந் தேதி நமது காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி இலவச பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெரும் மாணவர்களுக்கு இந்திய வரலாறு மற்றும் அறிவியல் வகுப்புகளை நடத்தியதுடன், மாணவர்களின் போட்டித்தேர்வினை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி நம்பிக்கையூட்டினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய உணவினை தன் கையால் பரிமாறி அவர்களுடனே மதிய உணவு சாப்பிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
நிருபர் .ராமநாதன்



Comments
Post a Comment