கோவை மாவட்டம்கொலைக் குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் SP.பத்ரிநாராயணன் IPS நடவடிக்கை
கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (14.02.2022)ம் தேதி பொன்னுசாமி(50) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக,
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த கோபால் பிள்ளை என்பவரது மகன் ராஜா (52) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. சமீரன் இ.ஆ.ப., அவர்கள் ராஜா(52) என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி கொலை வழக்கு குற்றவாளியான ராஜா(52)என்பவரைகோவைமாவட்டகாவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிருபர்.P.நடராஜ்.

.jpeg)
Comments
Post a Comment