குவைத்தில் வேலையில்லால் உணவின்றி உயிருக்குஆபத்தானநிலையில் தவிக்கும் தனதுபெண்ணை மீட்டுகோண்டுவர கோரி தாம்பரம் காவல்ஆணையர் M.ரவி IPS அவர்களிடம் பெண் புகார்


 தாம்பரம்  காவல் ஆணையர், முனைவர் திரு.M.ரவி, IPS அவர்களை திருமதி, வனஜா, க/பெ. முருகானந்தம், எண். 1/399, லட்சுமணன் நகர் திரிசூலம், சென்னை 43. என்பவர் கடந்த 27.04.2022 ஆம் தேதி நேரில் சந்தித்து தனது மகள் திருமதி. மஞ்சுளா வயது/37, க/பெ. சீனிவாசன் என்பவரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த டிராவல் ஏஜென்ட் பாஷா என்பவர்ரூ. 60,000/- த்தை பெற்றுக்கொண்டு கடந்த 17.03.2022 ஆம் தேதி மஞ்சுளாவை குவைத்திற்கு வீட்டு வேலைக்கு அனுப்பியதாகவும், ஆனால் தனது மகள் மஞ்சுளா 23.04.2022 ஆம் தேதி தனக்கு அனுப்பிய வீடியோவில் தான் வேலையில்லாமல் உணவுக்கே வழியின்றி கஷ்டப்படுவதாகவும், இங்கு இருந்தால் தன்னை சித்ரவதை செய்து கொடுமைபடுத்துவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதால் தனது மகளை மீட்டுத்தர கோரி கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவுசெய்து

 பாதிக்கப்பட்ட பெண் மஞ்சுளாவை உடனடியாக மீட்க தாம்பரம் காவல்ஆணையர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் தாம்பரம் மாவட்ட காவல் துணைஆணையாளர் திரு. M.R. சிபி சக்கரவர்த்தி, IPS அவர்களின் மேற்பார்வையில் பல்லாவரம் சரக காவல்உதவி ஆணையர் திரு. D.ஆரோக்கிய ரவீந்திரன்,  அவர்களின் நேரடி மேற்பார்வையில் S.5 பல்லாவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு. S.R.G.தயாள் அவர்கள் மேற்படி புகாரினை பெற்று S.5, பல்லாவரம் காவல் நிலைய குற்ற எண் 336/2022 ச/பி 406, 420 இதச,யில் வழக்குபதிவு செய்து தாம்பரம் காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும். வழிக்காட்டுதலின்படி மேற்படி பாதிக்கப்பட்ட பெண்ணைதுபாய்க்கு அனுப்பிய செங்கத்தை சேர்ந்த ஏஜென்ட் பாஷா மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட திரிசூலத்தை சேர்ந்த திருமதி. மும்தாஜ் ஆகியோர்களிடம் தீவிரவிசாரணை செய்து முறைபடி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி 

குவைத்திலிருந்து பாதிக்கப்பட்ட பெண் திருமதி. மஞ்சுளாவை மீட்டு 02.05.2022விமானம் மூலம் சென்னைக்கு  கொண்டு வரப்பட்டார். மேற்படி வழக்கில்பாதிக்கப்பட்ட பெண்ணை இந்தியா கொண்டுவர துரிதமான நடவடிக்கைமேற்கொண்ட தாம்பரம்  காவல் ஆணையர்  முனைவர் திரு.M.ரவி, IPS  அவர்களை திருமதி, வனஜா, க/பெ. முருகானந்தம், எண். 1/399, லட்சுமணன் நகர் திரிசூலம், சென்னை 43. என்பவர் கடந்த 27.04.2022 ஆம் தேதி நேரில் சந்தித்து மேற்படி வழக்கில்பாதிக்கப்பட்ட பெண்ணை இந்தியா கொண்டுவர துரிதமான நடவடிக்கை

மேற்கொண்ட தாம்பரம் காவல் ஆணையாளர் M.ரவி IPS அவர்களை மீட்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறி வெகுவாக பாரட்டினார்கள்.

முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.