ஈரோடுமாவட்டம் கவுந்தம்பாடி அருகே ரோட்டில்பணத்துடன்கிடந்த பேகைகாவல்நிலையத்தில்ஒப்படைத்தமனிதநேயகட்சி பொருப்பாளர்.



  ஈரோடுமாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆண்டி பாளையத்தை  சேர்ந்த விவசாயி சிவக்குமார் (77) என்பவர் (04/05 2022) காலை வங்கியில் இருந்து நெல் விற்ற பணம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பத்திரம் மற்றும் அவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற பயனுள்ள பல அடையாள அட்டைகள் ஒரு கருப்பு பேக்கில் வைத்து வந்துள்ளார் ஆனால் அந்த பேக்கை ஆண்டி பாளையத்திற்கு அருகில் தொலைத்து விட்டார். அந்த வழியே வந்த நமது கோபியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி நகர துணைச் செயலாளர்  ஜான் வெஸ்லி அவர்கள் கீழே கிடந்த அந்த பேக்கை கண்டெடுத்தார். தான் கண்டெடுத்த அந்த பேக்கை  கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு J. சுபாஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் , காவலர்கள் முன்னிலையில் ஈரோடு மேற்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்சலிம் ராஜா,தமிழ்நாடு  முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் S.முஜிபுர் ரகுமான் , கவுந்தப்பாடி கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கவுந்தப்பாடி கிளை துணைத்தலைவர்    K M உசேன் கான் மற்றும் கவுந்தப்பாடி கிளைதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிளைஆகியோர்உடனிருந்தனர்.

தலைமைநிருபர்.கவுந்திகண்ணன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.