ஈரோடுமாவட்டத்தில் காவல்துறைசார்பில் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ஈரோடு கரூர் சாலையில் உள்ள மூல கவுண்டம்பாளையத்தில் சாலை பாதுகாப்பு விதிகள் போக்குவரத்து விதிகள் பாதுகாப்பான சாலைப் பயணம் சாலை விபத்தை தடுக்க போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா கடந்த 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது குறைபாடு காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த பூங்கா தற்போது செயல்பட்டு வருகிறத
தற்போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V. சசிமோகன் ஆலோசனையின்படி , ஈரோடு தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் திரு, கதிரவன் அவர்கள் மற்றும் துணை ஆய்வாளர் சரவணன் அவர்களும் அந்த பார்க்கிற்கு வந்திருந்த கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோருக்கு போக்குவரத்து விதிகளைப் பற்றியும் சாலை போக்குவரத்திற்கான விழிப்புணர்வு ஆகிய அனைத்து தேவைகளையும் மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்தினார்கள் . மேலும், இந்த பார்க்கு திங்கள் முதல் சனி வரை , காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4:00 மணிக்கும் மாலை 7:00 மணி வரையிலும் திறந்து இருக்கும் . அனைத்து கல்லூரி மாணவ மற்றும் மாணவிகளும் , பள்ளி மாணவ-மாணவிகளும், சாலை போக்குவரத்து விதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள பயன்படும் வகையில் உள்ளது .
சிறப்புநிருபர்.காமராஜ்



Comments
Post a Comment