திருநெல்வேலிமாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறைசார்பாக சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறையினர் சமூக நல்லிணக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி 02-05-22 மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது காவல்துறையினர் மாணவர்களிடம் இன்றைய சமுதாயத்திற்கு சமூக நல்லிணக்கம் மிக மிக அவசியமானதாகும். நாம் நம்மை சுற்றி இருப்பவர்களோடும் நம்முடன் தொடர்பில் இருப்பவர்களோடும்,என்றும் ஜாதி,மத, வேறுபாடுகளை பார்க்கக் கூடாது எனவும் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய சிந்தனையோடு பேசி பழக வேண்டும் என்றும் மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்காலத்தில் நாட்டை ஆளப் போகும் தலைவர்களாகவும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவராக வரபோகிறவர்கள் என்றும் பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மாணவர்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டனர்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்
.jpeg)
.jpeg)

Comments
Post a Comment