திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நடத்திய நில அபகரிப்புபுகார்மனு தொடர்பான ஆய்வு முகாமில் நிலுவையில் உள்ள மனுக்கள் விரைந்து முடிப்பு.
திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு., IAS அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS, அவர்கள் உத்தரவின்பேரில் (12.05.2022 ) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஆய்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் துணை ஆட்சியர், சிறப்பு வருவாய் வட்டாட்சியர், துணை வருவாய் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவு அலுவலர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயபால் பர்னபாஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர்
கலந்து கொண்டு நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான மனுக்களின் மனுதாரர்களை மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.
தலைமை நிருபர் சண்முகநாதன்

.jpeg)
Comments
Post a Comment