கோவை மாவட்டம்கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர் கைது... மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் அதிரடி .
கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எல்லைக்குட்பட்ட இடங்களில் மே 1 உழைப்பாளர் தினமானதால் மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் மது விற்பனையை தடுக்க வேண்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க காவல் துணை கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் அவர்களின் மேற்பார்வையில், பேரூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்களை தடுக்கும் பொருட்டு கண்காணித்துக் கொண்டிருந்த போது ஆனைமலை, காளியாபுரம், கந்தசாமி கவுண்டர் வீதியில் சரோஜினி என்பவர் அவரது வீட்டில் அரசு மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அரசு மதுபான கடைகள் மூடிய பிறகு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வாளர் அவர்கள் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மது பாட்டில்களை விற்பனை செய்த சரோஜினி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து அரசு மது பாட்டில்கள் -1222 குவார்ட்டர் பாட்டில்கள்- 24,பீர் பாட்டில்கள் மற்றும் கார்-1 -ஐ பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல் புரிந்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
நிருபர் P.நடராஜ்

Comments
Post a Comment