சௌராஷ்டிரா சமுதாய மக்களை கிறிஸ்துவ மதத்தில் மாற்ற சௌராஷ்டிரா மொழியில் பைபிள் உருவாக்கிமதுரையில் கிருஸ்துவ அமைப்புகள்சதி சௌராஷ்ட்ராமக்கள் புகார்


 சௌராஷ்ட்ரா மக்களின் கலாச்சார பண்பாட்டை சீரழிக்கும் மதமாற்ற வேலைகளை மதுரையில் சில கிறிஸ்துவ அமைப்புகள் செய்துவருவதாக சௌராஷ்டிரா மக்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் மனு அளித்தனர்.  சௌராஷ்டிர மொழியில் பைபிள் உருவாக்கி சௌராஷ்ட்ரா சமுதாயத்தில் நலிவடைந்த மக்களை கண்டறிந்து அவர்களை அணுகி அவர்கள் குடும்ப உறுப்பினருக்கு உதவி செய்வதுபோல் உணவு உடை நிதி உதவி போன்ற உதவிகளை செய்து அவர்களை கட்டாயமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்கான சதி வேலை செய்து வருகிறது சில கிறிஸ்துவ அமைப்புகள் .                                                                                                   அதற்கு ஆயுதமாக சௌராஷ்டிரா மொழியில் பைபிள் அவர்கள் வேதப்படி உருவாக்கி அந்த பைபிளை சௌராஷ்டிரா சமுதாய மக்களுக்கு கொடுத்து அதை படிக்க சொல்லி இயேசு கிறிஸ்து மட்டுமே உங்கள் சமுதாயத்தை காப்பாற்ற முடியும் அவரை ஏற்றுக் கொண்டு பைபிளை பின்பற்றினால் நீங்கள் மோட்சம் அடையலாம் அனைத்து பிரச்சனைகள் இருந்தும் விடுபட்டு வாழ்வில் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற கருத்துகளை சௌராஷ்டிரா மக்களிடம்சொல்லி  அவர்களுக்கு மூளைச் சலவை செய்து கிறிஸ்துவ அமைப்புகள் அவர்களை கட்டாய மதமாற்றம் செய்ய தூண்டி வருகிறது.     இந்த சமுதாய மக்களின் கலாச்சார சீரழிவை தடுக்கும் வண்ணம் சௌராஷ்ட்ரா சமுதாய மக்கள் சென்னையில் 01-05-22 கண்டன ஆர்ப்பாட்டம் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அவர்களுக்கு புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார்கள்.                                                                                                                  இதை தமிழக அரசும் காவல் துறையும் தலையிட்டு இந்த கட்டாய மதமாற்ற கலாச்சார சீரழிவை தடுக்க வேண்டும் என சௌராஷ்ட்ரா சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

.நிருபர் G.சதீஷ்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.