புதுகோட்டைமாவட்ட காவல்துறையில் இரயிலில் அடிபட்டு உயிரிழந்த தலைமைகாவலர் குடும்பத்திற்க்கு30.00.000,லட்சம் காப்பீடுதொகை வழங்கிய பாரதஸ்டேட்வங்கி
. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த தலைமை காவலர் திரு. கண்ணன் அவர்கள் இரயிலில் அடிப்பட்டு இறந்தமைக்காக Police Salary Package விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ரூ.30,00,000 / -யை அவரது குடும்பத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் வழங்கினார்கள்...
தமிழக காவல்துறையில் கடந்த 1997 - ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து, இலுப்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த திரு . கண்ணன் ( 49 ) என்பவர் கடந்த 14.09.2021 - ம் தேதி காலை வெள்ளாற்று பாலம் அருகில் உள்ள ( நமணசமுத்திரம் செல்லும் ) தண்டவாளத்தில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக காரைக்குடி to திருச்சிராப்பள்ளி வரை செல்லும் இரயிலில் அடிபட்டு சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் இவர் பாரத ஸ்டேட் வங்கியில் Police Salary Package விபத்து காப்பீட்டு திட்டத்தில் சம்பள கணக்கு வைத்திருந்ததன் பயனாக அதை கண்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் சீறிய முயற்சியால் புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் திரு.செல்வராஜூ மற்றும் புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாளர் திருமதி. R. சத்தியபிரியா ஆகியோரின் மூலம் தலைமை காவலர் கண்ணன் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.30,00,000 / - ( ரூபாய் . முப்பது இலட்சம் ) காசோலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் IPS அவர்களால் தலைமை காவலரின் மனைவி திருமதி. K. லெட்சுமி அவர்களிடம் 06.05.2022 ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வரவழைத்து வழங்கப்பட்டது.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Comments
Post a Comment