நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 30-04-2022 ம் தேதியன்று, கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தொடங்கிவைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் IPS அவர்கள்.
நெல்லை மாநகர காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம். நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில்,30-04-2022 ம் தேதி, பாளையங்கோட்டை ஊரக மருத்துவமனை மருத்துவர் திருமதி.தமிழரசி அவர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது . இந்த சிறப்பு முகாமை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.சந்தோஷ் குமார் IPS அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
உடன் நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் திரு.K.சுரேஷ் குமார் அவர்கள், CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.சங்கர் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.நாகசங்கர் அவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாத காவல்துறையினர், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்



Comments
Post a Comment