வேலூர்மாவட்டம்: ஆபரேஷன் கஞ்சா என்கிற டீமைமாவட்ட SP.S.ராஜேஷ்கண்ணா IPS அவர்கள் நேரில் பாராட்டி சான்றுகள் வழங்கினார்
.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் மாநிலம் முழுவதிலும் 28.03.2022 முதல் 17.04.2022 வரை " ஆபரேசன் காஞ்சா 2.0 " வேட்டை நடத்த உத்திரவிட்டதின் பேரில் , வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr.J.ஆனி விஜயா . , IPS , அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ்கண்ணன் , IPS அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் கடந்த 1 வாரமாக மாவட்டம் முழுவதும் கஞ்சா ( ம ) குட்கா தொடர்பான தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கஞ்சா தொடர்பாக இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 45 கிலோ அளவிலான கஞ்சா கைப்பற்றப்பட்டது அதன் மதிப்பு சுமார் ரூ .4,44,000 / - ஆகும் .
மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 - இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குட்கா தொடர்பாக மொத்தம் 95 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு அதில் 99 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் . அவர்களிடமிருந்து சுமார் 900 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றின் மதிப்பு ரூ .7,74,995 / - ஆகும்.
மேலும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, 06.04.2022 காலை 11.00 மணியளவில் ஆபரேசன் காஞ்சா 2.0 " வேட்டையில் சிறப்பாக பணியாற்றிய காட்பாடி காவல் ஆய்வாளர் திரு.ஆனந்தன் தலைமையிலான போலிசாரையும் , குட்கா தொடர்பாக சிறப்பாக பணிப்புரிந்த ஆய்வாளர் திருமதி . சுப்புலட்சுமி தலைமையிலான போலிசாரையும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்திற்க்கு அழைத்து பாராட்டுசான்றிதழ்கள் வழங்கினார்.
சிறப்புநிருபர்.ரா.சக்திவேல்

Comments
Post a Comment