தென்காசிமாவட்ட காவல்துறையினருக்கு SP.கிருஷ்ணராஜ்IPS தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு. உஷா அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக கோடைகால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தென்காசியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இம்முகாமில் கலந்துகொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மதுமேகம்,உயர் இரத்த அழுத்த நோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன.மேலும் அவர்களில் நல்வாழ்விற்காக, ஆயுஷ் மருந்துகளும், நோய்த் தடுப்பிற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.மேலும் ஆயுஷ் மருத்துவத்தின் சிறப்புகள் பற்றிய பதாகைகள் மூலிகை கண்காட்சி,மருந்துசெய் மூலப்பொருள்கள்
ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு,கோடைகால நோய்த்தடுப்பு விளக்க பிரசுரங்கள் விநியோகப்படுத்தப்பட்டது.தாக சமணி(ஆயுர்வேதா) ,தடியங்காய் சாறு, பானகம்,ப்ரி பயோடிக் புரோபயோடிக் சாறுகள் ( யோகா) மற்றும் கபசுர குடிநீர் (சித்தா)ஆகியவை வழங்கப்பட்டு இவைகளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.இதில் காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயிற்சி சித்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர்
.நிருபர்.அண்ணாமலை.


.jpeg)
Comments
Post a Comment