திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கான Small libraryயினை திறந்து வைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்:
தென் மண்டல காவல்துறை தலைவர் IG திரு.அஸ்ரா கார்க், IPS அவர்கள் 3-4-22 திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS,அவர்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகள், நிறைவேற்றப்பட வேண்டிய பிடியாணைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்துகளை குறைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பார்வையாளர்களின் பொன்னான நேரத்தை பயன்பெறும் வகையில் மாற்றி வரவேற்பு அறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின்படி புத்தகம் மற்றும் தினசரி நாளிதழ் அடங்கிய Small library அமைக்கப்பட்டுள்ளது. இதனை தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் மாவட்ட காவல் அலுவலக வளாகத்திற்குள் சுற்றுப்புற சூழலை பேணி காக்கும் பொருட்டு மரக்கன்று நட்டு வைத்தார்
.தலைமைநிருபர்.S.சண்முகநாதன்


.jpeg)
Comments
Post a Comment