கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சத்திகணேசன்.(IPS)அவர்களின் உத்தரவுப்படி வர்த்தக சங்க வர்த்தகர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம்
கடலூர்மாவட்டம்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சத்திகணேசன்.(IPS )அவர்களின் உத்தரவுப்படி மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய இரண்டு பகுதியில் உள்ள வர்த்தக சங்க வர்த்தகர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம். நெல்லிகுப்பம் சுகம் திருமண மண்டபத்தில் பண்ருட்டி டிஎஸ்பி பரிந்துரையின்படி காவல் ஆய்வாளர் அசோகன் அவர்கள் தலைமையில் குட்கா, புகையிலை,கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் விதிமுறைகளை மீறி வியாபாரிகள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் வியாபாரிகள் மத்தியில் நெல்லிக்குப்பம் காவல்துறை எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்
.சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்


Comments
Post a Comment