ஆனைமலையில் காணாமல் போன சிறுமிகளை கண்டுபிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பத்ரிநாராயணன்IPS அவர்கள்:
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 மற்றும் 14 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் (05.04.2022)ம் தேதி காலை தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர்கள் வெகுநேரமாகியும் வராததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஆனைமலை காவல் நிலையத்திற்கு பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.
புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் காவலர்கள் சிறுமிகளை கண்டுபிடித்து பெற்றோர் வசம் நல்ல முறையில் ஒப்படைத்தனர். துரித நேரத்தில் செயல்பட்டு சிறுமியர்களை தேடி கண்டு பிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகளும் வழங்கி பாராட்டினார்கள்.
நிருபர்.கோவிந்தசாமி

.jpeg)

Comments
Post a Comment