திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடியில் வேலூர் சரக DIG., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சாராய வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க ஆலோசனைகூட்டம்.


வாணியம்பாடி ஏப்ரல் 09 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜர் நகர், லாலா ஏரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த கும்பலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கடந்த மாதம்  6 ம்தேதி ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டியும் சாராய விற்கப்படும் கொட்டகையை தீ வைத்து எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய முட்டைகளை  கைப்பற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வேலூர்காவல் சரக  DIG.ஆனி விஜயா உத்தரவின்பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து  கள்ள சாராயம் விற்று வந்த 21 பேரை கைது செய்துள்ளனர் .இதில் 6 முறை குண்டர் சட்டத்திலும் 80 வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றவாளியான மகேஷ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் மேலும் அவர்களது உறவினர்களை இதுவரையில் கைது செய்யாத நிலையில்  வாணியம்பாடி வருகை தந்த DIG. ஆனி விஜயா அவர்கள் சாராய கும்பலை சேர்ந்த  முக்கிய குற்றவாளிகளை உடனடியாக தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் அப்பகுதி மக்கள் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் அவர்களளிடம் சாராய விற்கப்படும் தகவலை காவல்துறையினருக்கு தெரிவிக்கும் குடும்பங்களை குறிவைத்து மகேஸ்வரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.  உடனடியாக அதுபோன்று செயலில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வாணியம்பாடி .துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பாலகிருஷ்ணன் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.

Reporter.muhamedunus


Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.