திருநெல்வேலி: CCTV- கேமரா அமைப்பதின் முக்கியத்துவம் குறித்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்திய வள்ளியூர் காவல்துறையினர்
CCTV- கேமரா அமைப்பதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன்IPS அவர்களின் அறிவுரையின்படி மாவட்டத்தில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் CCTV கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன்படி 01-04-22 வள்ளியூர் காவல்துறையினர் மற்றும் வள்ளியூர் ரோட்டரி கிளப் இணைந்து CCTV-கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு பேரணியை *வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா IPS அவர்கள் தொடங்கி வைத்தார். *வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது, அவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ரோட்டரி கிளப் வள்ளியூர் சென்ரல் குழுவினர் ஆகியோர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார்கள்.
இவ்விழிப்புணர்வு பேரணி வள்ளியூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வள்ளியூர் முக்கிய வீதிகள், பஜார் மற்றும் கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வள்ளியூர் காவல் நிலையத்தில் நிறைவுபெற்றது
.தலைமைநிருபர்.S.சண்முகநாதன்


Comments
Post a Comment