.ஈரோடுமாவட்டம், சென்னம்பட்டியில் இருந்து, வெளிநாடுகள் வரை, விளையாட்டுபோட்டிகளில் சாதனைகள் புரிந்த, கவுந்தப்பாடி காவல் நிலைய தலைமை காவலர் சரவணகுமாருடன் நேர்காணல். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், சென்னம்பட்டி கிராமத்தில், விவசாய குடும்பத்தைச் சார்ந்த நல்லசாமி காமாட்சி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்த, திரு. சரவணகுமார் தனது கடின உழைப்பாலும், உடற்பயிற்சியாலும், தமிழக காவல்துறையில் தேர்வாகி, இதுவரை கவுந்தப்பாடி காவல் நிலையத்தில், தலைமை காவலராக திறம்பட பணிபுரிந்து, தற்போது கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும், திரு. சரவணகுமார் அவர்கள், தற்போது தேசிய அளவில், விளையாட்டுபோட்டிகளில் பல சாதனைகள் புரிந்து, பிறந்த மண்ணிற்கும், காவல்துறைக்கும். நாட்டிற்கும், பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். தான் கஷ்டப்பட்டு, கடந்த வந்த பாதை பற்றி, பட்டதாரியான திரு. சரவணகுமார் கூறுகையில், நான் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உடற்பயிற்சி, நண்பர்கள் உதவி மூலம், ஊட்டச்சத்து உணவு வகைகள் உட்க்கொண்டு, விளையாட்டு மற்றும் தமிழக காவல்துறையில்,...
Comments
Post a Comment