சந்தையில் கிடந்த தங்கச் செயினை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் பாராட்டு
08-04-22திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்குட்பட்டமீன் சந்தையில் கடை வைத்திருக்கும் சோரிஸ்கோஸ்தா என்பவர் கீழே கிடந்து தங்க செயினை எடுத்துள்ளார். அதனை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் அருகில் உள்ள வள்ளியூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் தங்கச் செயின் ராஜபுதூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடையது தெரியவந்தது.பின் வள்ளியூர் போலீசார் தங்கச் செயினை தவறவிட்ட நபரை வரவழைத்து தக்க அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி தங்கச்செயினை அவரிடம் ஒப்படைத்தார்கள். கீழே கிடந்த தங்கச் செயினை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் எடுத்து வந்த சோரிஸ்கோஸ்தா வின் நற்செயலை கண்ட வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல்ஹமீது மற்றும் போலீசார் வெகுவாகப் பாராட்டினர்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments
Post a Comment