திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், வாகனத்தில் குட்கா பொருட்கள் கடத்திவந்தவர்கள் வாகனத்துடன்கைது காவல்துறையினர்அதிரடி:
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் IPS உத்தரவின் பேரில் செய்யாறு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில் தலைமையில் மாவட்ட தனிப்படை துணை ஆய்வாளர் திரு.சத்யானந்தன் மற்றும் போலீசார் இணைந்து செய்யாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மடக்கி விசாரணை நடத்தியதில் வாகனத்தில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சரக்கு வேனை சோதனை செய்ததில், வேனில் இரண்டு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு நூதன முறையில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கீழ்விஷாரம் புதுத் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 22), பரத் மோகன் (19), செய்யாறு தாலுகா சந்தைமேடு பகுதியை சேர்ந்த சாதிக் (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து, நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிலோ எடை கொண்ட குட்கா போதைப் பொருட்கள், ரூ.1.34.ooo\\\ லட்சம் ரொக்கம் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை. நடத்தி வருகின்றனர்.
சிறப்புநிருபர் இரா.சக்திவேல்

Comments
Post a Comment