கொடைக்கானலில் புதிதாக கட்டப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி கட்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியில் காவல் நிலையம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும் நபல வருடங்களாக ஒரே இடத்தில் இயங்கி வந்தது, இந்நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது, இதனை தொடர்ந்து லாஸ்காட் சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 127.52 லட்சங்கள் மதிப்பில் புதியதாக காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடப்பணிகள் நடைபெற்று தற்போது முடிவடைந்த நிலையில்,12-04-22 இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்,இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் அவர்கள் மற்றும் திண்டுக்கல்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.லாவண்யா அவர்கள் தலைமையில் ரிப்பன் வெட்டி,குத்துவிளக்கேற்றி அலுவலக பணியை துவக்கிவைத்தனர், இந்நிகழ்வில் கொடைக்கானல் நீதிமன்ற நீதியரசர்கள், கோட்டாட்சியர்,ஆணையாளர்,
நகர்மன்ற தலைவர்,அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிருபர்.R.குப்புசாமி

Comments
Post a Comment