தூத்துக்குடி மாவட்டம் காவல்துறைசார்பாக கஞ்சா,குட்கா விற்பனையைதடுக்க வியாபாரிகள் ஆலோசனைகூட்டம்:






தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற  போதை பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி ராஜ் மஹாலில் 07-04-22  அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர . திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்டி கடை மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை 100 சதவீதம் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை தடுப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் படி சமீபத்தில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளிகளின் அருகில் சட்டவிரோதமாக குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதை முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை 100 சதவீதம் தடை செய்ய வேண்டும், மீறினால் சட்டப்படி அந்த கடைக்கு சீல் வைக்கப்படுவதுடன் குற்றவியல் வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்ந கூட்டத்தில் தூத்துக்குடி வியாபாரிகள் சங்க தலைவர் சோலையப்பராஜா, செயலாளர் மகேஸ்வரன், தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கர், பொருளாளர்  ஆறுமுகம், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் உட்பட காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

நிருபர்.அய்யப்பன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.