திருநெல்வேலி மாவட்டம். காவல்துறையினருக்கு பாலினஉணர்திறன்பயிற்சி:
தமிழக காவல் துறையினருக்கு பாலின உணர்திறன் குறித்து பயிற்சி வழங்குமாறு தமிழக காவல்துறை DGP.Dr.C.சைலேந்திரபாபு IPS அவர்கள் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பாலின உணர்திறன் பயிற்சி வகுப்பு 05-04-22 திருநெல்வேலி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன் அவர்கள் தலைமையில் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள முத்து மஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 64 பேர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட நீதிபதி திருமதி.சமீனா அவர்கள்,கலந்து கொண்டார். நீதிபதி அவர்கள் பாலின உணர்திறன் குறித்தும் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் குறித்தும் சிறப்புரையாற்றினார். பயிற்சியில் காவலர்களுக்கு பாலின உணர்திறன் குறித்தும், ஆரோக்கிய உணவு குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் குழந்தைகள் நல அலுவலர்களால் காவல்துறையினருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், 1098 மற்றும் 181 இலவச எண்கள் குறித்தும், குழந்தைத் திருமணம் குறித்தும் காவலர்கள் எவ்வாறு அவர்களிடம் அணுக வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீராள்பானு, அவர்கள் மற்றும்உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

.jpeg)

Comments
Post a Comment