பொதுமக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முன்னதாக கூட்டம் தொடங்கியதும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அமிர்த கணேசனுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இ நடைபெற்றது. ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேயர் பேசுகையில், பொதுமக்களுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிர்வாக செலவிற்காகவும், மாநகராட்சியின் பழைய கடன்களுக்காகவும் ரூ.226.05 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பொதுமக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு 25 சதவீதம் முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது என்றார்.
தொடர்ந்து சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்
தூத்துக்குடி மாநகராட்சியில் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாநகராட்சியில் முதல் முறையாக லெவிஞ்சிபுரம் வாட்டர் டேங்கிலிருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு பழைய குடிநீர் இணைப்புகளுக்கு பதிலாக புதிய பைப்லைன் வழங்கப்படும். தேவைப்படும் இடங்களில் தெருக்குழாய்கள் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
நிருபர்கள்.N.ராமசாமி,அய்யப்பன்.

Comments
Post a Comment