காஞ்சிபுரமாவட்டத்தில் குற்றதடுப்பு நடவடிக்கை யாக குற்றவாளிகளை கண்டறிய அதிநவீனகேமரா செயல்பாடுகளை மாவட்டஆட்சியர் துவக்கிவைத்தார்

 காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலும், முக்கிய பொது இடங்களிலும் குற்றம் புரியும் நோக்கத்தில் செயல்படும் பழைய குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காணும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதின் முக்கிய அம்சமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.M.ஆர்த்தி IAS அவர்களால் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளத

குற்றப்பின்னணி கொண்ட நபர்களின்  முக அம்சங்களும் அடையாளங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு  அவ்வாறு பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சந்தேகநபர்கள் வந்து செல்லும் பொழுது காவல் துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், மென்பொருளுடன் கூடிய கேமராக்களின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் முயற்சியினால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 31 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும், ஒரகடத்தில் 110  கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது இடங்களில் பெண்கள் / குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நடைமுறைபடுத்தபடும் என்பது குறிப்பிடதக்கது.

சிறப்புநிருபர்.ம.சசி

Comments

Popular posts from this blog

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.ஆடை அணிவித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் தலைமை காவலர்.

தூத்துக்குடி மாவட்டகாவல்துறைசார்பாகபொதுமக்களுக்கு மாற்றத்தைதேடி சமூகவிழிப்புணர்வுநிகழ்ச்சி.